உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி April மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும். இந்தப் போட்டி இந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் Corday, Argentan நகரில் இடம் பெற உள்ளது.

சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

கனடா நாட்டின் சார்பில் இவர்கள் அனைவரும் வெற்றிவாகை சூடி வர கரம்பொன் நெட் இணையத்தளமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.