இவ்வருடத்தின் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் கனடா நடத்திய தனது 13வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை 27-12-2025 அன்று கனடா ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. விருதுகள் வழங்குவதினூடாக சமூக நோக்கம் கொண்ட தனது பாதையில் தொடர்ந்தும் செயற்படுவதை கண்கூடாக காண முடிந்தது என்ற திருப்தியும் விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் தோன்றியது.

இவ்வருடத்தின விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் கனடிய தமிழர் சமூகத்தால் நன்கு அறியப்பெற்றவர்களாக தெரிந்தார்கள். வர்த்தகமும், சமூக சேவையையும் கணிப்பிட்டு வழங்கப்பெற்ற விருது கணேசன் சுகுமார் அவர்களுக்கும் அவர்களும் சிறந்த சமூக உறவிற்கான விருது அருண் குலசிங்கம் அவர்களுக்கும் இசைத்துறையில் வழங்கப்பெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது அரவிந்தன் மகேசன் அவர்களுக்கும். கணக்கியல் துறை மற்றும் வருமான வரி ஆலோசனை விருது வேல். புருசோத்தமன் அவர்களுக்கும் சிறந்த சமூக சேவையாளர் விருது ஜோதி பிரபாகரன் அவர்களுக்கும் கணக்கியல் மற்றும் நிதி மேலான்மை விருது சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்களுக்கும் சிறந்த தொழில் வழங்குவோர்க்கான விருது பொன்னையா வில்வரத்தினம் அவர்களுக்கும் வழங்கப்பெற்றன.

அத்துடன் கனடாவில் மிகவிரைவில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்” நிறுவப்பெறுவதற்கான நிதியை மேலும் பெற்றுக்கொள்ளும் வகையில் அங்கு உரையாற்றிய சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் அவசியமான விடயங்களை சபையோரிடம் அன்பாக எடுத்துக் கூறினார். விழாவை ஆரம்பத்திலிருந்து திருவாளர்கள் கென் கிருபா மற்றும் ஜஸ்ரின் போல் ஆகியோர் நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்கள்.








