கனடா மார்க்கம் மற்றும் ஸ்காபுறோ சத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது ஜெயந்தி தினம் இன்று நவம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையும், மாலையும் 5321 Fich Ave East இல் அமைந்துள்ள Sri Sathya Sai Mandir இல் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. அத்துடன் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் உணவும் வழங்கப்பட்டது.









