ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு குரு மன்றத்தினரால் ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அன்று காலை 7 மணிமுதல் பாத பூஜையுடன் ஆரம்பமாகி மேளக்கச்சேரியுடன் வீதி உலா நடைபெற்று பங்காரு அடிகளாரின் திருவுருவப் படம் ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.
சக்தி திரு.அருட்சோதி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஸ்ரீ ஆதிபராசக்தி அன்னையின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் பாடல்கள் பாடப்பட்டு பின்னர் பாடல்களுக்கு அபிநயம் செய்து நடன மணிகள் பரத நாட்டியம் ஆடினார்கள். மண்டபம் நிறைந்த ஆதிபராசக்தியின் சக்திகள் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்கள்.
நன்றி-உதயன்