kukulkan-pyramid-in-chichen-itza-1aகடந்த வாரம் உலக அதிசயங்களில் ஒன்றான மாயன்களின் ‘ஷிசேன் இட்ஷா’ (Chichen Itza) பிரமிட் மற்றும் மாயன்கள் வாழ்ந்த இடங்களையும் பார்ப்பதற்காக ஒருவார கால விடுமுறையில் மெக்சிக்கோவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தோம். மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட ‘ஷிசேன் இட்ஷா’ (Chichen Itza) என்னும் பிரமிட்தான் அது. சிச்சென் இட்ஷா என்பது, பண்டைய மாயன் நாகரீகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிய புகழ் மிக்க கோவில் நகரமாகும்.

குக்குல்கானுடைய பிரமிட், சாக் மூல் கோவில், ஆயிரம் தூண் மகால், கைதிகள் விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்டிடக் கலைக்கும் வடிவமைப்புக்கும் அவர்கள் காட்டிய அதீத ஈடுபாட்டை வெளிக்காட்டும் வகையில் இன்றும் காண முடிகிறது. இந்த கடைசி பிரமிட், மாயன் நாகரீக கோவில்களில் மிகப் பெருமை வாய்ந்தது.

kukulkan-pyramid-in-chichen-itzaஅஸ்ட்ராலாஜி Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம். 

kukulkan-pyramid-in-chichen-itza-3மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் ‘வான சாத்திரம்’ என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை ‘வானவியல்’ என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.

kukulkan-pyramid-in-chichen-itza-4நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள். ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படி நான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவா? என்ன செய்தார்கள் மாயன்கள்? கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக் கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  ஒவ்வொரு வருடமும் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வதாகக் கூறுகிறார்கள். 

 

maayan-trip-1

maayan-trip-2maayan-trip-3

maayan-trip-4

maayan-trip-5

maayan-trip-6

maayan-trip-7

maayan-trip-8

maayan-trip-9

maayan-trip-11

maayan-trip-10