அன்னையின் மடியில் 26-08-1966
ஆண்டவன் அடியில் 10-10-2022
யாழ். ஊர்காவற்துறை கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன், கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொண்ட கந்தையா ஸ்ரீதரன் அவர்கள் 10-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நொத்தாரிசு கந்தையா அரியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சியாமளாதேவி, கோமளாதேவி(சாந்தா- பிரான்ஸ்), ஸ்ரீகாந்தா(ஸ்ரீ -கனடா), பத்மநிதி(பத்மா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் குலேந்திரன், குமாரி, மனோரதன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது"
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் "கரம்பொன் நெட்" இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.