உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் 3 கனேடிய நகரங்கள்!

Canada1aமுன்னிலை உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ம் இடத்தையும், வான்கூவார் 5ம் இடத்தையும், றொரன்டோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் தனது 87வது வயதில் முதுகலை பட்டம் பெற்ற வரதா சண்முகநாதன்

varathaகனடாவில் வசித்துவரும் இலங்கையரான வரதா சண்முகநாதன் தமது 87வது வயதில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று ஒட்டுமொத்த சமூகத்தையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இணையமூடாக நடந்த பட்டமளிப்பு விழாவில் 87 வயதான வரதா சண்முகநாதன் ஒன்ராறியோவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.


கனேடிய இராணுவத்தில் சாதித்த யாழ்ப்பாண இந்துவின் மைந்தன் மதியாபரணம் வாகீசன்!

m.Vaaheesan1aகனேடிய பாதுகாப்புப் படையில் 25 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்னும் சிறப்பு விருதினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியாபரணம் வாகீசனிற்கு கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய அரச சார்ந்த கௌரவத்தைப் பெற்ற அவர் தற்பொழுது கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஒரு சிரேஷ்ட நிதியியல் சேவைகள் நிர்வாகியாக பணியாற்றி தற்போது மனிடோபாவில் முதுநிலை நிதியியல் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுமையான காணொளி,

 


Elson Badminton Club நடாத்திய வருடாந்த நத்தார் ஒன்றுகூடல் 2021!

Elson Xmas 2021-1கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய வருடாந்த நத்தார் ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன டிசம்பர் 18ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள '"The Estate Banquet Hall" மண்டபத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நடனம்ஆகியனவும் இடம்பெற்று சிறுவர் சிறுமியர்களுக்கு அன்பளிப்புக்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 


Friends Badminton Club of Canada விளையாட்டுக் கழக ஆண்களுக்கான இரட்டையர் பூப்பந்தாட்ட போட்டிகள்!

11-21-21 FB-1aநவம்பர் மாதம் 21ம் திகதி  ஞாயிற்றுகிழமை Friends Badminton  Club of Canada விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளுக்கிடையே பூப்பந்தாட்ட போட்டிகள் கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் " Epic Sports Centre"  இல் நடைபெற்றது. இப் போட்டிகள் 20 இரட்டையர் பிரிவுகளுக்கிடையே நான்கு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆரம்பபமாகியது.


கனடா மகாஜனா பழைய மாணவர்களின் பாராட்டுவிழாவும், இரவு விருந்துபசாரமும்

Maha-Dinner-Nov21-1aமிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந்த விருந்துபசாரத்தில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.


யுனைரெட் விளையாட்டுக்கழகம் நடாத்திய 14வது ஆண்டு பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி 2021

UBSC-2021-114வது ஆண்டு நிறைவையொட்டிUnited Tamil Sports Club   நடாத்திய Badminton சுற்றுப் போட்டி கடந்த 11ம் திகதி திங்கட்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள Progress Badminton Centre இல் நடைபெற்றது. ஆண்கள்இ பெண்கள்  சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி  காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் யுனைரெட் விளையாட்டுக்கழகம் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது. 


மேலைக் கரம்பொன் ஸ்ரீ முருகமூர்த்தி கோவில்-எதிர்காலச் சிந்தனைகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும்

Murugan1aகடந்த சனிக்கிழமை (09-10-2021) அன்று மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில் நிர்வாகத்தின் தலைவர் க.குகனேஸ்வரன் அவர்களால் கனடாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் கரம்பொன் மக்களுடன் மதிப்புக்குரிய சிவஸ்ரீ சோமாஸ்கந்த குருக்கள் அவர்கள் கலந்து கொண்டு முருகமூர்த்தி கோவில் பற்றிய பூர்வீக வரலாறு பற்றி தனது அனுபவங்களைத்; தெரிவித்ததோடு குகனேஸ்வரன் அவர்கள் எமது கிராமத்திலுள்ள ஆலயங்களுக்குச் செய்யும் சமயப்பணிகளை பாராட்டிக் கௌரவித்தார். அத்துடன் அன்று மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில் பரிபாலனசபை கனடாக் கிளையின் அஙகத்துவர்களாக தலைவர் த.பேரின்பநாதன் அவர்களும், செயலாளராக திருமதி ப.சாரதாம்பாள் அவர்களும், பொருளாளராக கு.மகேந்திரமோகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். 


யாழ் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்களுக்கு “அன்பே சிவம்” விருது

punchஆண்டுதோறும் சிவராத்திரி தினத்தில் சைவ மகா சபையினால் வழங்கப்படும் " அன்பே சிவம்" விருதை யாழ் இந்துக்கல்லூரிகளின் புகழ் பூத்த முன்னாள் அதிபர் தன்னலமற்ற மனிதநேய சேவையாளர் சிவத்திரு அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்களுக்கு வழங்க சைவ மகா சபையின் மீயுயர் சபை தீர்மானித்துள்ளது.

இவர் ஓய்வுக்கு பின்னரும் 25 ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் பல சமய, சமூக அமைப்புக்களின் உயிர்ப்பான தலைவராக, ஆலோசகராக வழிகாட்டியாக இருந்துள்ளார்.


இரண்டு வெற்றிகரமான பல மில்லியன் டாலர் நடைமுறைகளை இயக்குவதற்கான டாக்டர் ரஞ்சித் மகேனின் ரகசியம்

ranjith1aஒன்ராறியோவில் உள்ள டர்ஹாம் பிராந்தியத்தில் (டர்ஹாம் ஸ்பைன்கேர் & புனர்வாழ்வு மையம்) 2 வெற்றிகரமான பலதரப்பட்ட கிளினிக்குகளின் உரிமையாளராக , டாக்டர் ரஞ்சித் மகேன் கூறுகையில், 15,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பராமரிப்பதில் அவர் அதிர்ஷ்டசாலி, காயங்கள், நாட்பட்ட வலிகள் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறார் இயற்கையாகவே. அவர் "ஒரு வாழ்க்கை" அணுகுமுறையை நம்புகிறார், திருப்பித் தருகிறார் மற்றும் மக்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.