நல்லூர் கந்தசாமி கோவில் தேர் திருவிழா 2025

கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகிறது. 20ஆம் திகதி புதன்கிழமை சப்பரத் திருவிழாவும்இ 21ஆம் திகதி வியாழக்கிழமை தேர் திருவிழாவும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.


‘சோக்கல்லோ’ சண்முகம் அவர்களின் வெற்றியின் இரகசியம் அவரது இளமைக் காலமே!

கடந்த 02-08-2025 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘மல்வேர்ன் சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற சோக்கல்லோ’ சண்முகம் என்னும் கலைஞரின் 90வது அகவைப்(நவதி விழா) பெருவிழாவில் இந்த அற்புதமான விழாவிற்கு ‘;தமிழகன்’ மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார். ஏழாலை மக்கள் நலன்புரிச் சங்கத்தினரால் நடத்தப்பெற்ற இந்த விழாவில் பல்துறை சார்ந்தவர்கள் உரையாற்றினார்கள்.


நயினை நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தேர்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புதன்கிழமை 9ஆம் திகதி நடைபெற்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஆரோக்கியமான பாடசாலைக்கான விருதினை பெற்றது யாழ் இந்து.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பங்கேற்ற 8,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளில், Active Lifestyle பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது!

விருது வழங்கும் விழா ஜூலை 3, 2025 அன்று வியட்நாமின் டனாங்கில் உள்ள Pullman Beach Resort இல் நடைபெற்றது.

முன்னதாக, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி இலங்கையின் ஆரோக்கியமான பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு ஆசிய-பசிபிக் பிராந்திய போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.


ஒரு நூற்றாண்டின் ஆச்சரியம்! திரு வினாசித்தம்பி செல்வநாயகம்

இன்று 20-05-2025 செவ்வாய்கிழமை தனது நூறாவது ஆண்டு பிறந்த நாளை உற்றார் உறவினர்னளுடன் கொழும்பில் கொண்டாடும் தென் கரம்பொனைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்களை இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ கரம்பொன்.நெட் இணையத்தளத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2025

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2025) Durham  இல் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 05-03-2025 சனிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.


உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஏற்பாட்டில் 10ஆவது உலகக்கிண்ணப் போட்டி

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி யுpசடை மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் Argentan நகரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 16ற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 276 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.


அவதானியின் கவிதைகள்…!

யாருக்கும் வெட்கமில்லை……✍️

என் தவணைமுறை வாக்குரிமை
இம்முறையும் உங்களுக்காக
உடைந்தவற்றைச் சரி செய்ய அல்ல
சட்டபூர்வமாக்க முயலும்
உங்கள் வருகையை உறுதி செய்ய

ஒவ்வொரு விரிசலும் உங்கள்
வெற்றிக்கான வரைகோடு
ஒவ்வொரு குறைபாடும் உங்கள் சட்டதிட்டத்திற்கான அனுமதி


கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது விருது வழங்கும் விழா!!

கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி ஊக்குவித்து வரும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 25 வது தொழில் முனைவோர் விருது விழா கடந்த 12ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஜந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. விருது விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடந்த Gala Night நிகழ்விலும் திரளான தமிழ் வர்த்தகப் பெருமக்களும், கனடிய அரசியல் மட்டத்தினைச் சார்ந்த பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி April மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும். இந்தப் போட்டி இந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் Corday, Argentan நகரில் இடம் பெற உள்ளது.

சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.