நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா தற்போது நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது. தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.


கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழா

கனடாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழா கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள “The Estate Banquet Hall” மண்டபத்தில் நடைபெற்றது. ‘தமிழ் இலக்கியத் தோட்ட’த்தின் 2022 இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் மேற்படி ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் நூலை எழுதியமைக்காக ‘இந்திய இலக்கிய தரிசன விருது’ என்னும் உயரிய கௌரவத்தை எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும். இலக்கியச் சாதனைக்கான விசேட விருதை கனடா வாழ் வி. என். கிரிதரனும் பெற்றுக் கொண்டனர்.


கனடாவில் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் தமிழ் பேசும் அணு விஞ்ஞானி. பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை எழுதிய ‘அணுவைத் துளைத்து’ என்னும் நூலின் வெளியீட்டு விழா ஸ்காபுறோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.


உலகத் தமிழர் பூப்பந்தாட்ட (பாட்மின்டன்) பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான 8வது பூப்பந்தாட்டப் போட்டி

ஈஸ்டர் விடுழுறை நாட்களான ஏப்ரல் 08 மற்றும் 09ம் திகதிகளில் சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் (Bern)  உலகத் தமிழர் பூப்பந்தாட்ட (பாட்மின்டன்) பேரவையினால் எட்டாவது தடவையாக (Badminton) போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.


கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெற்ற “ஹனுமான் ஜயந்தி”

குருவார வியாழன் கூடிய “ஹனுமான் ஜெயந்தி” தினமான இன்று 06-04-2023 ஸ்ரீ பொன்சாயி இளைய தலைமுறை தொண்டர்களால் (Sri Ponsai Youth Wing) கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, துளசி மாலை அணிவித்தும் செந்தூரம் இட்டும் பொங்கல் பொங்கி பூசை வழிபாட்டுடன் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!


Toronto Smashers Badminton Club – Award Night & Dinner Gala-2023

கனடாவில் இயங்கிவரும் Toronto Smashers Badminton Club நடாத்திய வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்து ஆகியன ஏப்ரல் 1ம் திகதி சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இசை, நடனங்கள் முதலான கலை நிகழ்ச்சிகளுடன் விளையாட்டு வீரர்கள் மற்றும் விழா அனுசரனையாளர்கள் விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். விருந்துபசாரத்தைத் தொடர்ந்து நன்றியுரையுடன் விழா இனிதே முடிவுற்றது.


கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெற்ற இராமநவமி வீதி ஊர்வலம்

இராமநவமி தினமான இன்று 30-03-2023 வியாழக்கிழமை கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் ஸ்ரீ பொன்சாயி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தரிசனத்துடன் புதிய இரதத்தில் வீதி உலா(சாவடி ஊர்வலம்) சுருவில் வீதி செபஸ்தியார் கோவிலடியால் புறப்பட்டு சாதி , சமய வேறுபாடின்றி வீதி தோறும் இல்லங்களில் சாயி மகாராஜாவிற்கு ‘பூரணகும்ப மரியாதைகள்’ நடைபெற்று ஒழுவில் வைரவர் கோவிலடியால் ஸ்ரீP பொன்சாயி இருப்பிடத்திற்கு மீண்டும் வந்தடைந்தார்.


கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர்

கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த புதன்கிழமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி தேவதாஸ் தொடக்க உரையாற்றியதைத் தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக தமிழகத்தின் பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு சபையோரைக் கவரும் வகையில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் ஆகியவை தொடர்பாக உரையாற்றினார்.


பலரையும் வியக்கவைத்த கனடா வாழ் யாழ்ப்பாண பெண்மணி வரதா சண்முகநாதன்!

கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் யாழில் அவருக்குச் சொந்தமாக உள்ள காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாழில் வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்பவரே தனக்கு சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (18-02-2023) மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.


கனடாவின் ஒட்டாவா மாநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா 2023

கனடாவின் ஒட்டாவா மாநகரில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தமிழ் மரபுரிமைத் திங்கள் மற்றும் பொங்கல் விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் தை 30, 2023 திங்கள் கிழமை கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் உட்பட கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் கனடாவின் எல்லா கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி இருந்தனர். கனடிய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கனடாவின் எல்லா பாகங்களிலும் இருந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.